சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு விருது
Subscribe to Oneindia Tamil

உலக அளவில் உள்ள வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிக்களத்தில் உள்ள பிற போட்டியாளர்களை விட சல்மான் ருஷ்டி அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.
இந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர் வரும் 10-ம் தேதி முறைப்படி லண்டனில் அறிவிக்கப்படுவார்.
61 வயதாகும் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். சாத்தானின் கவிதைகள் என்ற அவரது நூல் முஸ்லிம் மதத்தை இழிவாகச் சித்திரிக்கிறது என்று கூறி உலகம் முழுவதும் அவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கோமினி, சல்மானுக்கு மரணதண்டனை அறிவித்தார்.
அதே நேரத்தில் அவரது இலக்கியப் பணிகளை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டி, கௌரவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications