ஆடிப்பூரம்: ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு சீர்!

Subscribe to Oneindia Tamil

Andal
ஸ்ரீரங்கம்: ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டுப்புடவை சீர் கொண்டு செல்லப்படுகிறது.

32 ஆண்டு காலத்திற்கு முன்புவரை இந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இடைப்பட்ட காலத்தில் இதை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பிரதாயத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம்.

பன்னிரு ஆழ்வார்களில் இறைவனை காதலித்து அவரையே மணப்பேன் என்று பிடிவாதம் பிடித்தவர் ஆண்டாள் என்னும் கோதை நாச்சியார். இறைவன் மீதான தன் காதலை பாடல்களாக பாடி, ஸ்ரீரங்கம் அரங்கநாதனையே திருமணம் செய்து கொண்டார்.

அவர் பிறந்த ஆடிப்பூர விழா அனைத்து வைணவத் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோலாகல விழாவாக ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரத்தன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுப்புடவை சீர் செல்வது பல ஆண்டுகால வழக்கமாகும். இந்த சம்பிரதாயம் ஸ்ரீரங்கத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் விசேஷமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

நாளை ஆடிப்பூர விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டுப்புடவை சீர் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. அருள்மிகு ரங்கமன்னார் மற்றும் கருடாழ்வாருக்கு பட்டு வேட்டியும் சீராக கொண்ட செல்லப்படுகிறது.

32 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த சீர் கொண்டு செல்லப்படுவதாக இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் கவிதா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+