துபாயில் திருச்சி கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு
துபாய்: திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில் நடக்கிறது.
துபாயில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்து முன்னாள் மாணவர்களின் சந்திப்பு வரும் 4ம் தேதி மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகிக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள தொலை பேசி எண் 050 5489 609 தொடர்பு கொள்ளலாம்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications