மனநலம் குன்றியவர்களுக்கு சேவை - பான்யன் அமைப்புக்கு விருது
சென்னை: மன நலம் குன்றியவர்களுக்கான சேவையாற்றி வரும் பான்யன் அமைப்புக்கு ஸ்ரீராம் இலக்கிய கழகத்தின் அறம் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கிய கழகம், 2007ம் ஆண்டுக்கான அறம் விருதினை சமீபத்தில் அறிவித்தது. மன நலம் குன்றியவர்களுக்காக சீரிய முறையில் சேவையாற்றி வரும் பான்யன் அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடந்த விழாவில் அறம் விருதினை சட்டீஸ்கர் மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் வழங்கினார். விருதினை பான்யன் சார்பில் வைஷ்ணவி ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார். ரூ. 1 லட்சம் பரிசினையும் அவர் அப்போது வழங்கினார்.
இதுதவிர பான்யன் அமைப்பின் ஒரு நாள் செலவுக்காக ரூ. 1 லட்சத்தை ஸ்ரீராம் குழுமம் வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்கஏளுக்கும் பரிசுகளை ஆளுநர் நரசிம்மன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நரசிம்மன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் மன நலம் குன்றியவர்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றுகின்றன, பல உதவிகளையும் செய்துவருகின்றன. இருப்பினும் சில தொண்டு நிறுவனங்களே அவர்களின் மறு வாழ்வுக்காக பாடுபடுகின்றன.
மன நலம் குன்றியவர்களை பார்க்கும் பார்வையில் நம்மிடையே மாற்றம் வர வேண்டும். அவர்கள் குறித்த தவறான எண்ணங்கள் மனதிலிருந்து அகல வேண்டும்.
இந்த வகையில், இந்த அறம் விருதுக்கு பான்யன் அமைப்பு முற்றிலும் பொருத்தமானது. இந்த அமைப்பை நிறுவியவர்களான வந்தனா கோபிகுமாரும், வைஷ்ணவி ஜெயக்குமாரும் கர்மயோகிகள்.
மனநலம் குன்றியவர்களின் துயர் துடைத்ததே பான்யன் அமைப்பின மிகப் பெரிய சாதனையாகும். அசாதாரண மனிதர்களின் இயக்கத்தில் நாம் எல்லாம் சாதாரண மனிதர்களாக இருக்கிறோம். இதுபோன்ற அசாதாரண மனிதர்கள், மனநலம் குன்றிய மக்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருதாகும் என்றார் அவர்.
திருக்குறலில் கூறியுள்ள அற நெறியைப் பின்பற்றி செயல்படும் தனி நபர்கள், சமூக ஆர்வலர்களுக்கு இந்த அறம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications