வேடந்தாங்கல்..வந்தனர் விருந்தினர்கள்

சென்னையில் இருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்குள்ள 75 ஏக்கர் ஏரிக்கு ஆண்டுதோறும் இலங்கை, ரஷ்யா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பறவைகள் வருவது வழக்கம்.
அக்டோபர் முதல் மார்ச்மாதம் வரையிலான சீசனில் ஆயிரக்கணக்கில் பறவைகள் இங்கு வந்து முகாமிட்டு, முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும். இதனால் இந்த ஏரியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் பறவைகளாகத் தான் காட்சியளிக்கும்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கி ஏரியில் நீர் நிறைந்தபின் பறவைகள் வரத் தொடங்கும். டிசம்பர் மாதம் தான் சீசன் களைகட்டும்.
இந் நிலையில் இந்த ஆண்டு இப்போதே 15,000 பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்புதாரா, நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, ஊசிவாயன் வாத்து, சிரவி, புள்ளிவாத்து, மரத்தாரா, பெரிய கொக்கு, நீர்க்காகம் உள்பட 24 வகை பறவைகள் அடக்கம்.
பறவைகளைப் பார்க்க பார்வையாளர்களும் குவிய ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தான் இந்த சரணாலயம் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இப்போதே பறவைகள் அதிகம் அளவில் வந்துவிட்டதால் நவம்பர் முதல் வாரத்திலேயே சரணாலயம் திறக்கப்படும் என்று தெரிகிறது.
இங்குள்ள ஏரியில் பாதி மூழ்கிய மரங்களின் கிளைகளில் கூடுகளைக் கட்டி இந்தப் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். படகில் சென்றபடி மரங்களின் மிக அருகில் நின்று பறவைகளை, கூடுகளைக் காணலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications