தமிழ்த்தாய் அறக்கட்டளை சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாரியம்மன் கோயில் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் சேவை விருது 2008, பெற தகுதியுடையோர் ஜூலை 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் முத்துப்பேட்டை நா. இராசமோகன், துணைத் தலைவர் தியாகதுருகம் இரா. துரைமுருகன், செயலர் த. உடையார்கோயில் குணா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்மொழி சேவையாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதும், சமூக நல சேவையாளர்களுக்கு மனித நேய மாமணி விருதும் ஆண்டுதோறும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மொழி சேவையாளர்கள் மொழிப் போராட்டம், தமிழர் உரிமைப் போராட்டம், கதை, கவிதை, சொற்பொழிவு மூலம் தமிழ்மொழிக்கு ஆற்றியுள்ள பணிகளை தக்க சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சமூக நலம் சார்ந்த மருத்துவம், பொதுநலம், கல்வி, தொழில்வாயிலாக மனித நலச் சேவையாற்றியவர்கள் அதற்கான புகைப்படம், சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

வண்ணப் புகைப்படம் மற்றும் தங்களைப் பற்றிய முழுமையான தகவல்களுடன் செயலர், தமிழ்த்தாய் அறக்கட்டளை, மாரியம்மன் கோயில், தஞ்சாவூர்- 613501 என்ற முகவரிக்கு ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 93606 72743 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+