15 பஞ்சாயத்துக்களுக்கு உத்தமர் காந்தி விருது
சென்னை: சிறப்பாக செயல்பட்ட 15 கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு உத்தமர் காந்தி விருதினை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழகத்திலுள்ள கிராம ஊராட்சிகள் அனைத்தும் அடிப்படை வசதிகளை விரைந்து பெறவேண்டும் என்னும் விழைவோடு, அவற்றின் செயல்பாடுகளில் போட்டியுணர்வை ஏற்படுத்தி, திட்டப் பணிகளை விரைவுபடுத்திடும் நோக்கத்துடனும், ஊராட்சிகள் மேலும் சிறப்பாகச் செயல் பட ஊக்கமளித்திட வேண்டும் என்பதற்காகவும், கிராம ஊராட்சிகளின் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில்,
அவை மேற்கொண்டுள்ள புதுமையான முயற்சிகளைப் பாராட்டி சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் 15 கிராம ஊராட்சிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கேடயமும், அந்த ஊராட்சிகளின் தலைவர்களுக்கு அவர்களின் செயல்திறன்களைப் பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து வழங்கப்படும் விருதுக்கு, உத்தமர் காந்தி ஊராட்சி விருது' என முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
மாநில அளவில் முன் மாதிரியாக அரசின் திட்டங்களைச் சிறப்பான முறையில் செயல்படுத்திச் சாதனைகள் நிகழ்த்தியுள்ள 84 கிராம ஊராட்சிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பரிந்துரைகள் பெறப்பட்டன.
அவற்றிலிருந்து 43 கிராம ஊராட்சிகளை 4 பேர் கொண்ட குழு தேர்வு செய்தது. இந்த 43 கிராம ஊராட்சிகளிலும், கூடுதல் இயக்குநர் நிலையிலான 3 குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைத்தனர்.
அந்த அறிக்கையின் அடிப் படையில், 2007-2008ஆம் ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது பெறுவதற்குத் தகுதியுடைய 15 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள்:
1. திருவாரூர், பள்ளிவர்த்தி ஜெயராமன்
2. இராமநாதபுரம், திருவரங்கம் மரியராஜ்
3. நாமக்கல், முதலைப் பட்டி பழனிவேல்
4. ஈரோடு, மைலம் பாடி திருஞானசம்பந்தம்
5. சிவகங்கை, காட்டேந்தல் சுக்கானூரணி அருள்மேரி
6. திருநெல்வேலி, கீழ வெள்ளகால் ராமாத்தாள்
7. விருதுநகர், பெத்துரெட்டியப்பட்டி ராஜேந்திரன்
8. இராமநாதபுரம், தாமரைக்குளம் கிருஷ்ண வேணி
9. நாகப்பட்டினம், விழுந்தமாவடி ராதாமணி
10. திருநெல்வேலி, இடையன்குடி சேகர்
11. தஞ்சாவூர், சீனி வாசநல்லூர் யசோதா
12. கரூர், ஈசநத்தம் இராமசாமி
13. நீலகிரி, தும்மனட்டி விஸ்வநாதன்
14. தேனி, இராம சாமிநாயக்கன்பட்டி மணிமேகலை
15. திண்டுக்கல், ம.மு. கோவிலூர் சாகுல் ஹமீது
ஆகிய 15 கிராம ஊராட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்-அமைச்சர் கலைஞர் "உத்தமர் காந்தி ஊராட்சி விருது'' நல்கி, தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலை, கேடயம், பதக்கம், சான்றிதழ் ஆகியவைகளை வழங்கி வாழ்த்துகள் கூறினார்.
விருது பெற்ற 15 ஊராட்சிகளுள் முதல் 5 ஊராட்சிகளில் கடந்த முறை ஊராட்சிமன்றத் தலைவர்களாக இருந்தவர்களே தற்போதும் தலைவர்களாக உள்ளனர், எஞ்சிய 10 கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே தலைவர்களாக இருந்த,
1. திருநெல்வேலி, கீழவெள்ளகால் பூமாரியப்பன்
2. இராமநாதபுரம், தாம ரைக்குளம் சிவலிங்கம்
3. நாகப்பட்டினம், விழுந்த மாவடி முத்துலெட்சுமி
4. திருநெல்வேலி, இடையன்குடி ஜெயாகனி
5. நீலகிரி, தும்மனட்டி ருக்குமணி
6. தேனி, இராமசாமி நாயக்கன்பட்டி இராசாராம்
7. திண்டுக்கல், ம.மு. கோவிலூர் நைனா முகமது ஆகிய முன்னாள் தலைவர்களையும் முதல்வர் கருணாநிதி இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பித்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications