பேருந்துகளில் தமிழில் பயணச்சீட்டு
சென்னை: சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளி்ல் தானியங்கி இயந்திரங்கள் மூலம் தமிழில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்குவது நடைமுறைக்கு வந்துள்ளது.
மாநகர பஸ்களில் பயணச் சீட்டுகள் வழங்கும் முறையை எளிதாக்கும் வகையில், தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் நடத்துநர்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
ஆனால், இந்தப் பயணச் சீட்டுகளில் அனைத்து வாசகங்களும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இதையடுத்து மாநகர பஸ் நடத்துநர்களுக்கு வழங்கப்பட்ட 2,850 இயந்திரங்களிலும் உள்ள சிம்கார்டில் தமிழில் பயணச்சீட்டுகளை அச்சிட்டு வழங்கும் வகையில் படிப்படியாக தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த இயந்திரங்களை வடிவமைத்த பெங்களூர் நிறுவனத்துக்கு முதற்கட்டமாக 850 இயந்திரங்கள் அனுப்பப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணச் சீட்டுகள் அச்சிட்டு தற்போது பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
வரும் பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து இயந்திரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணச் சீட்டுகள் அச்சிட்டு வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ராமசுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications