சென்னையில் 2வது உலக சித்தர்கள் மாநாடு
சென்னை: சத்தியத்தின் சக்தி நிலை சங்கம் மற்றும் ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் இணைந்து நடத்தும் 2வது உலக சித்தர் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து நிதியமைச்சர் க.அன்பழகன் பேசுகையில்,
உலக சித்தர் நெறி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்து பார்த்தேன். ஏனென்றால் சித்தர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சித்தர்களின் ஞானத்தை பெற்றவர்களுக்கே அது பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் நிலையில், எனக்கு தெரியாததது பற்றி ஒன்றும் கவலை இல்லை.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வாசகம் இருந்தாலும், மக்கள் பல தெய்வங்களை வணங்கினாலும் பசிக்கிறவர்களுக்கு உணவு கொடுப்பதே உண்மையான இறைவனாகும். இறைவனுக்கு படைக்கபடும் படையல் மக்களுக்கு தான் சென்று சேருகிறது.
தமிழ்நாட்டில் சித்தர்களால் நாம் பக்குவம் பெற்றிருக்கிறோம். இந்த சமுதாயத்தின் வழிகாட்டிகள் சித்தர்கள் தான். ஒவ்வொரு மனிதனின் எண்ணம் தான் வாழ்க்கை, அந்த எண்ணத்தை உயர்த்துவது தான் சித்தர்களின் நெறி என்றார்.
மாநாட்டிற்கு வந்தவர்களை இரண்டாவது உலக சித்தர் நெறி மாநாட்டின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.மதிவாணன் வரவேற்றார். மாநாட்டில் சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், தொழிலதிபர் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி நா.மகாலிங்கம், அகத்தியர் ஞானபீடம் தங்கராசு அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications