இலங்கையில் கடும் சண்டை: விடுதலைப் புலிகள் உட்பட 33 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த கடும் சண்டையில் 15 விடுதலைப்புலிகள் உட்பட 33 பேர் பலியாகினர்.
இரு தரப்பினருக்கிடையை நடந்த சண்டையில் 33 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
யாழ்பாணம் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் இரு தரப்பினருக்கிடையே நிகழ்ந்த சண்டையில் 15 விடுதலைப் புலிகள் உட்பட 30 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து விட்டனர்.
இந்த சண்டையில் நாகர்கோவில் பகுதியில் 4 பதுங்கு குழிகளும், முகமலை பகுதியில் 12 பதுங்கு குழிகளும், கிலாலியில் 8 பதுங்கு குழிகளையும் அழித்ததாக ராணுவத் தரப்பு கூறுகிறது.
மேலும், இந்த சண்டையில் ராணுவத் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதே போல் நேற்று வன்னிப் பகுதியில் நடந்த சண்டையில் 16 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
ஆனால் புலிகள் தரப்பு இணையத் தளத்தில் கூறியுள்ளதாவது,
யாழ்பாணம், வன்னி பகுதிகளில் நடந்த சண்டையில் அரசு தரப்பு படைகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
மன்னார் பகுதியின் பலைக்குழி என்ற இடத்தில் நேற்று நடந்த சண்டையில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 25க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications