இலவச பஸ் பாஸ் கோரும் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
திருக்கோவிலூர்: எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட கிளையின் அமைப்புக் கூட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ப.மதிவாணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் பாரதி சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் கோவி.ஆறுமுகம், விக்கிரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
எழுத்தாளர்கள், கவிஞர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.
தமிழக அரசு சார்பில் இலவச குடியிருப்புகள் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் எழுத்தாளர்கள், கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திறமைமிக்க எழுத்தாளர்களை தேர்வு செய்து செந்தமிழ்செம்மல், முத்தமிழ்ச் செம்மல், எழுத்துவேந்தர், இலக்கியவேந்தர், கவிமாமணி, கவிப்பேரொளி, கவிஞாயிறு, பைந்தமிழ்பரிதி ஆகிய துறை சார்ந்த விருதுகளை வழங்குவது என்றும் தீர்மானக்கப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு:
கூட்டத்தில் மலரடியான் மாவட்ட தலைவராகவும், மதிவாணன், பாரதிமணியன் ஆகியோர் துணைத் தலைவர் களாகவும், சுந்தரவடிவேல் செயலாளராகவும், ஜெயக்குமார், தமிழினியன் ஆகியோர் துணை செயலாளர்களாகவும், நன்மொழி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக நல்லாசிரியர் கணேசன், தமிழ்ச்சுடர், வல்லபராஜ், ரவிச் சந்திரன், கோதண்டபாணி, சிவக்குமார், பிச்சைப்பிள்ளை, ரமேஷ், பாக்கியராஜ், மோகன் தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications