For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய 'பொடா'-எதிர்த்து கண்டன கூட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் மத்திய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) மற்றும் யு.எல்.ஏ.பி. சட்டத் திருத்தங்களைக் கண்டித்து சென்னையில் கண்டனக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7ம் தேதி மாலை 5 மணிக்கு தேனாம்பேட்டை, வி.வி. கோவில் தெரு, பெஃபி (BEFI) அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இதில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் சி. மகேந்திரன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவஹிருல்லாஹ், தமிழ் தேசிய விடுதலை இயககத் தலைவர் தியாகு, பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் அ.மார்க்ஸ்,

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் கோ.சுகுமாரன், புதிய போராளி அமைப்பின் துரை சிங்கவேல், மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் சங்கரசுப்பு, இந்தியா உதயம் மனோகரன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் பா.புகழேந்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் ரஜினி காந்த், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேல் விவரங்களுக்கு ...

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
(People's Union for Human Rights - PUHR)
3/5 முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை - 20.
செல் : 94441 20582

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X