ராஜபாளையத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தின் படைப்பரங்கம்
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் ராஜபாளையத்தில் படைப்பரங்கம் நடைபெற்றது.
ராஜபாளையம் கிளை கலை இலக்கிய பெருமன்றத்தின் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவர் கோதண்டம் முன்னிலை வகித்தார். நவீன் வரவேற்றார்.
டாக்டர் சாந்திலால், ஆனந்தி, துரைராஜா, ஸ்ரீபதி, யுவபாரதி, முத்துக்குமார், ராஜேஸ்வரி கோதண்டம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், இலங்கைத் தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார், சிங்கள அரசால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்க ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கவிஞர் அறிவுமதி கொடுத்த கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது. ஈழம் பற்றிய வரலாற்றை ஆய்வாளர் நரேந்திரகுமார் விளக்கிக் கூறினார்.
அமைப்புச் செயலர் முத்துலிங்கம் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications