கண்ணதாசன், மு.வ. நூல்கள் நாட்டுடமையாக்கப்படும்: அன்பழகன்

Subscribe to Oneindia Tamil

Kannadasan
சென்னை: கவியரசு கண்ணதாசன், மு.வரதராசனார், பம்மல் சம்பந்தனார், சுந்தர ராமசாமி, அழ.வள்ளியப்பா உள்ளிட்ட 28 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று நிதி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் அன்பழகன் கூறுகையில்,

இந்த ஆண்டு கவியரசு கண்ணதாசன், குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், பண்டிதமணி மு.கதிரேசஞ்செட்டியார், மு.ராகவையங்கார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, எழுத்தாளர் சுந்தர ராமசாமி, தொ.மு.பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், ராய.சொக்கலிங்கனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர்கேசிகன், எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தன்,திருக்குறள்மணி அ.க.நவநீதகிருட்டிணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜமதக்னி மற்றும் ஜெ.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும்.

அவர்களது நூல்களின் எண்ணிக்கை, மக்கள் மனதில் அவை ஏற்படுத்திய தாக்கம், நூலின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் மரபுரிமை பரிவுத்தொகை வழங்கப்படும் என்றார் அன்பழகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+