இது படுகள திருவிழா..!

இதன் பின்னணியில் ஒரு வித்தியாசமான கதையும் உள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தை அடுத்துள்ளது காரைக்கேணி கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுக்கு முன்பு தென்னந்தோப்பு என்ற நாட்டை குணசீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.
கவசகோட்டை என்ற நாட்டை சத்தியவேந்தன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். 2 மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடப்பது வழக்கம்.
ஒருமுறை குணசீலன் வேட்டைக்கு சென்றபோது வல்லத்தான் குருவியை விரட்டி சென்று வில்லால் அடித்தார். அடிபட்ட குருவி கவசகோட்டை நாட்டுக்குள் விழுந்தது. இந்த குருவியை குணசீலன் எடுக்க சென்றபோது கவசகோட்டை மன்னர் தடுத்தார்.
இந்த பிரச்சனை குறித்து காரைக்கேணி நாட்டு அரசர் அரசுதேவர் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அதில் மன்னர்கள் 2 பேரும் நேருக்கு நேர் போரிட வேண்டும். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த குருவி அவருக்கே சொந்தம் என்று பஞ்சாயத்து பேசப்பட்டது.
தென்னந்தோப்பு அரசர் குணசீலன் தனது ராணியிடம் சண்டைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்படும் முன்பு ஒரு ஆட்டை கத்தியால் குத்தி குடலை உருவி அதை ஆட்டின் கொம்பிலேயே கட்டினார். மேலும் சேவலை துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலை உருவினார்.
ஆடும், சேவலும் உயிருடன் இருந்தால் தான் நான் போரில் வெற்றி பெற்று திரும்புவேன். இறந்து விட்டால் நானும் இறந்து விட்டதாக கருதிக் கொள் என்று ராணியிடம் கூறிவிட்டு சண்டைக்கு சென்றார்.
தென்னந்தோப்பு மன்னர் சண்டையில் கொல்லப்பட்டார். மன்னர் வாரிசுகளில் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு குதிரை வீரரும் எஞ்சிய மன்னரின் வாரிசும் தப்பி விடுகின்றனர். ஆடும், சேவலும் இறந்து விடுகின்றன.
இதனை நினைவூட்டும் விதமாக காரைக்கேணி மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த படுகளத் திருவிழாவை நடத்துகின்றனர். தப்பிப் பிழைத்த குதிரை வீரரின் வாரிசுகள் தான் இந்த விழாவை நடத்துகின்றனர்.
நேற்று முன் தினம் இரவும் இந்த விழா நடந்தது. ஒரு ஆட்டின் குடலை உருவி இறந்த மன்னரின் வாரிசான சாமியாடி ராசாத்தி அம்மாள் மாலையாக போட்டு கொண்டார். ஒரு சேவலை சிவப்பு துணியால் போர்த்தி கத்தியால் குத்தி குடலையும் உருவினர்.
இதையடுத்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மன்னரின் வாரிசுகளிடம் ஜாதி, மத பேதமின்றி பலரும் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்த விழாவைக் காண காரைக்கேணியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications