'தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் பெரியார்'
வேலூர்: அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியவை தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள்தான் என்று தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழத்தில் ஈவெரா பெரியார் சிலையை திறந்து வைத்த தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நான் கண்ட அண்ணா என்ற நூலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பின்பற்றி, அதிலிருந்து சற்றும் விலகாமல் தொடர்ந்து அதன்படியே பலர் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்களை இழிவுபடுத்தவும், அடிமையாக நடத்தவும், சுரண்டவும் இருந்த கூட்டங்களை அடையாளம் காட்டி தமிழர்களிடம் மலர்ச்சியை, மாற்றங்களை ஏற்படுத்தியவை பெரியாரின் கொள்கைகள் தான்.
நமது வாழ்க்கையை வீழ்த்தும் எண்ணங்களை மாய்க்கத் துணை நின்றவர் தந்தை பெரியார். அவரது சிலையைப் பல்கலைக்கழக வளாகத்தில் திறப்பதன் மூலம், பல வெளிநாட்டு மாணவர்களும் அவரைப் பற்றி அறிய நல் வாய்ப்பாகிறது என்றார்.












Click it and Unblock the Notifications