இன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க எழுச்சி பேரணி
சென்னை: ஈழத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது.
மாலை 4 மணிக்கு சென்னை மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் பேரணி நடைபெறும் என அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த கூட்டத்தில்,
இலங்கையில் சிங்கள ராணுவத் தாக்குதல் காரணமாக 1 லட்சத்துக்கும் மேலான தமிழர்களும், போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் ராணுவத்தின் பிடியில் அவதிப்படுகிறார்கள்.
போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க, ஐ.நா. சபை நேரடியாக தலையிட்டு பொறுப்பு ஏற்க வேண்டும்.
முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.
போரில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரவையும் பங்கேற்கிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications