துபாயில் காயிதெமில்லத் பிறந்தநாள் கல்வி கருத்தரங்கம்
துபாய்: துபாயில் காயிதெமில்லத் பிறந்தநாள் நினைவு கருத்தரங்கம் வரும் ஜூன் 5ம் தேதி நடக்கிறது.
இது குறித்து துபாய் காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் லியாக்கத் அலி கூறுகையில்,
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் 114வது பிறந்த நாள் நினைவாக கல்விக் கருத்தரங்கம் வரும் ஜுன் 5 ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாவட்டld தலைவர் மெளலானா பி.கே.என். அப்துல் காதிர், 'இசையருவி' குமரி அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலப் பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி மற்றும் கல்வியாளர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.
தொடர்புக்கு கீழக்கரை ஹமீது யாசின் 050 2533712 / முதுவை ஹிதாயத் 050 5196 433
மின்னஞ்சல்: [email protected]
இணையத்தளம்: http://www.muslimleaguetn.com, http://www.quaidemillathforumuae.blogspot.com


Click it and Unblock the Notifications
