வைகாசி விசாகம்:பழனியில் இன்று திருக்கல்யாணம்-நாளை தேரோட்டம்
பழனி: வைகாசி விசாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று ஜூன் 4ம் தேதியும், தேரோட்டம் நாளை 5ம் தேதியும் நடக்கிறது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத்துக்கு போல் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு விழா வைகாசி விசாகமாகும். இத்திருவிழாவின் போது முத்துக்குமார சுவாமிக்கு வசந்தமாலை அணிவிக்கப்படும். இதனால் இந்த விழாவுக்கு வசந்தோற்சவம் என்ற பெயரும் இருக்கிறது.
இந்நிலையில் வைகாசி விசாகம் திருவிழா கடந்த மே 29ம் தேதி பழனியில் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று ஜூன் 4ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் முத்துக்குமாரசாமிக்கும், வள்ளி, தெய்வாணைக்கும் நடந்தது.
நாளை ஜூன் 5ம் தேதி வைகாசி விசாகமாகும். இதையடுத்து தேரோட்டம் நடக்கிறது. பக்தர்களின் உற்சாக குரல்களோடு தேர் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நான்கு ரத வீதிகளிலும் உலா வரும்.
ரூ. 2 லட்ம் வெள்ளி கவசம்...
இந்நிலையில் உற்சவ மூர்த்தி முத்துக்குமார சுவாமிக்கு திருச்சி ஓம் ஜுவல்லர்ஸ் குப்தா, விஜயகுமார் பிரதர்ஸ் மற்றும் சேலம் ரகோத்தமன் ஆகியோர் சுமார் 6.6 கிலோ எடை கொண்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிக் கவசங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முத்துக்குமாரசாமிக்கு இரு உடல் பாகங்கள், பாதம், கை, மகரம், கிரீடம் என 12 பாகமும், வள்ளி, தேவசேனா ஆகியோருக்கு பாதம், கிரீடம், உடல்பாகம், அஸ்தம் என 16 பாகங்கள், ஒரு வெள்ளி வேல் என மொத்தம் 29 பிரிவுகளாக வெள்ளிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications