ஐரோப்பிய எம்.பி. தேர்தல்-ஜனனிக்கு எம்ஐஏ ஆதரவு

Subscribe to Oneindia Tamil

Janani Jananayakam and Maya Arulprakasan
லண்டன்: ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில், லண்டனிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிடும் ஈழத் தமிழ்ப் பெண் ஜனனி ஜனநாயகத்திற்கு (ஜேன்), பிரபல பாடகியும், ஈழப் பெண்ணுமான எம்ஐஏ எனப்படும் மாயா அருள்பிரகாசம் ஆதரவு தெரிவித்து பாடல் ஒன்றையும் அர்ப்பணித்துள்ளார்.

பாடகி எம்ஐஓ ஒரு ஈழப் பெண் ஆவார். திறமையான பாடகியாக விளங்கி வரும் இவரது தந்தை முன்னாள் விடுதலைப் புலி போராளி ஆவார்.

இலங்கையில் தமிழ் மக்கள் பட்டு வரும் துயரங்களையும், அவலங்களையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தெரிவித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட மறந்ததில்லை மாயா.

அந்த வகையில் தற்போது லண்டன் பிரதேசத்திலிருந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சுயேச்சையாகப் போட்டியிடும் ஜனனி ஜனநாயகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மாயா.

இதுகுறித்து தனது மை ஸ்பேஸ் பக்கத்திலும், ட்விட்டர் செய்தியிலும் மாயா தெரிவிக்கையில், ஜனனிக்கு போடும் ஓட்டு, 3 லட்சம் இலங்கைத் தமிழர்களைக் காக்க உதவும் என்று கோரியுள்ளார் மாயா.

இதுதவிர ஜனனிக்கு ஆதரவு தெரிவித்தும், ஈழத் தமிழர்களின் நிலையை வர்ணித்தும் ஒரு கவிதையும் உருவாக்கி, அதை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும் அனுமதி தந்துள்ளார் மாயா.

அந்த கவிதை வரிகள் இதோ..

so u wanna hear about my politics?
well i can show u things that can make u sick
theres a saterlite above me thats takin picks
the people from the east hav started sendin migs
and im sat in America doin twitts
and the armys lookin at me like im a bitch
but im thinking bout the babies lyin in the ditch
thinking if they had a kite fone u ll see the shit

மாயாவின் இந்த ஆதரவுக்கு ஜனனி நன்றி தெரிவித்துள்ளார். தமிழர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு இனத்தவர்களின் ஆதரவும் தனக்கு கிடைக்க மாயாவின் இந்த ஆதரவுக் குரல் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜனனி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+