இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும்: இறையன்பு

எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய 'கங்கையில் ஒரு சங்கமம்' நூலை வெளியிட்டு இறையன்பு பேசுகையில்,
சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக நேரம் சிந்திக்க வைக்கும்.
நமக்கு முன் எழும் கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முயற்சிக்க வேண்டும். மூளையின் திறன் வளர அறிவு உதவும். இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும்.
மக்களை நல்வழிப்படுத்துவது, அவர்களுக்குள் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை இலக்கியத்தின் பங்காக இப்போது மாறியுள்ளது.
இளைஞர்களுக்கு படித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் முன்பு இருந்தது. இதனால் புத்தகங்கள் படிப்பதை அவர்கள் தவமாகக் கொண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் சுருங்கிவிட்டது.
சவால்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், போராட்டங்களை இளைஞர்கள் எந்த அளவுக்கு தங்களின் வாழ்வில் சந்திக்கிறார்களோ அந்த அளவுக்குச் சாதனை படைப்பார்கள்.
பெற்றோரின் அரவணைப்பில் அதிகம் இருக்கும் குழந்தைகள் பின்னாளில் முருங்கை மரத்தைப் போல வலுவிழக்க நேரிடும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் இதய மருத்துவ நிபுணர் என்.சிவகடாட்சம், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நிர்வாகி ராமசுப்பையா, நூலாசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஆகியோர் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications