சிக்குன்குனியா, டெங்குவை ஒழிக்க உதவும் மரபனு மாற்ற கொசு - சென்னையி்ல் ஆய்வு ரீதியாக வளர்ப்பு

இந்த மரபனு மாற்ற கொசு, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு்ள்ளதால் அவை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை பரப்பும் கிருமிகளை ஏந்திச் செல்லாது. மேலும் இந்தக் கொசுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படும் கொசுக்களிலும் இந்த நோய் பரப்பும் திறன் இருக்காது. இதன்மூலம் நோய் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
இந்த கொசு குறித்த ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறை அனுமதி அளித்துள்ளது. தற்போது படப்பையில் உள்ள சர்வதேச பயோடெக்னாலஜி மற்றும் டாக்சிகாலஜி கழகத்தில் இந்த கொசு ஆய்வில் உள்ளது.
தற்போது ஆய்வில் 2வது கட்டம் முடிவடைந்துள்ளதாம்.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விசிட்டிங் ஆய்வாளரும், ஆக்ஸ்போர்ட் இன்செக்ட் டெக்னாலஜிஸ் கழகத்தின் (ஆக்ஸிடெக்) தலைவருமான எஸ்.எஸ்.வாசன் கூறுகையில், டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றைப் பரப்பும் கொசுக்களுடன் போராடி அவற்றை ஒழிக்கும் தன்மையுடன் கூடியதாக இந்த மரபனு மாற்ற கொசு (ஏடெஸ் ஏஜிப்டி -Aedes aegypti) இருக்கும்.
2002ம் ஆண்டு ஆக்ஸிடெக் உருவாக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்படும் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வர்த்தகமயாக்கும் முயற்சியில் இது ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இது ஆய்வு மற்றும் அமலாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். 120 நாடுகளில் இந்த டெங்கு பெரும் பாடுபடுத்தி வருகிறது. எனவேதான் இதை ஒழிக்க பெரும் பொருட் செலவில் மரபனு கொசுவை உருவாக்கும் ஆய்வில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
விரைவில் 3வது கட்ட பரீட்சார்த்த ஆய்வுகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர் இந்தத் தொழில்நுட்பம் வெளியிட்படும்.
இந்த ஆய்வு டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை அடியோடு ஒழிப்பது என்பதற்காக அல்ல. அப்படி செய்யவும் முடியாது. மரபனு மாற்ற கொசுக்கள் மூலம் டெங்கு, சிக்குன்குனியா பரவுவது குறையும் என்பதுதான் இதில் முக்கிய அமசம் என்றார் வாசன்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications