மகாபலிபுரத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் மூங்கில் ரிசார்ட்
சென்னை: தமிழகத்தி்ல் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மகாபலிபுரத்தில் மூங்கில் ரிசார்ட் ஒன்று துவக்கப்பட்டு்ள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் மகாபலிபுரத்தில் ரிசார்ட் ஒன்றை அமைத்துள்ளது.
இங்கு சுற்றுலா பயணிகளுக்கு ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் செய்யப்படும். இதை தவிர்த்து புத்துணர்ச்சிக்காகன சிகிச்சை முறைகள், ஆயுர்வேத பஞ்ச கர்மா முறை, அக்குபிரஷ்ஷர், யோகா மற்றும் தியானம் போன்றவை மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதை தவிர்த்து நீச்சல் குளம், வெண்ணீர் குளியல் என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுகம் இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இந்த ரிசார்ட் அமைக்கும் பணிகள் விரைவாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆயுர்வேத கல்லூரி ஒன்றின் முதல்வர் சிவ ராமகிருஷ்ணன் கூறுகையில், மகாபலிபுரத்தில் மூங்கிலால் செய்யப்ப்டட ஆயுர்வதே மற்றும் மருத்துவ ரிசார்ட்கள் துவக்கப்பட்டுள்ளன. இது வெளிநாட்டினரை மிகவும் கவரும். சுற்றுச்சூழலை காக்கும் நண்பனாக விளங்கும் என்றார்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தி்ன் பொது விவகார மானேஜர் ரவி கூறுகையில், தற்போது இங்கு 75 காட்டேஜ்கள் இருக்கின்றன. சைவம், அசைவம், சைனீஸ் உணவுகள் கிடைக்கும் என்றார்.
மகாபலிபுரத்தில் துவக்கப்பட்டிருக்கும் இந்த மூங்கில் ரிசார்ட்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தமிழகத்தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என தெரிகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications