மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அஞ்சலி செலுத்தின.
1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. இதிலிருந்து தப்பியோடும்போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அவர்களின் நினைவாக ஜூலை 23ம் தேதி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பாமக மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தாமிரபரணி ஆற்றில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை மள்ளர் மீட்பு கழகத்தினர், இ.கம்யூ, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர் பேரவை, புரட்சி பாரதம் கட்சியினர் உள்பட பலர் ஆற்றில் தொழிலாளர்கள் உயிர் நீத்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதிய தமிழகம் சார்பில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. பின்னர் அங்கிருந்த கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications