சனீஸ்வரன் கோயிலுக்கு எம்.எல்.ஏ. ரூ 20 லட்சம் நிதியுதவி
தேனி: தேனி அருகேயுள்ள குச்சனூர் சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய போடி எம்.எல்.ஏ.லட்சுமணன் ரூ 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தேனி மாவட்டம், குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த சனீஸ்வர பவகான் சுயமாக தோன்றியதால் சுயம்பு சனீஸ்வரன் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.
தமிழகத்தில் உள்ள பக்தர்களும், வெளி மாநிலத்தில் உள்ள பக்தர்களும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். ஆனால், குச்சனூர் சனி பகவான் கோயிலில் பக்தர்களுக்கு தேவையான சிமென்ட் தரை தளம், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இன்றி இருந்தது.
இதனால் பக்தர்களின் வசதி நலன் கருதி இந்த கோயிலில் பக்தர்களுக்கு தேவையான சிமென்ட் தரை தளம், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், திருவிழா சமயங்களில் பக்தர்கள் பல்வேறு சிரமங்கள் அடைந்து வந்தனர். குச்சனூர் பகுதி மக்கள் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினரின் கோரிக்கை ஏற்று அடிப்படை வசதிகள் செய்து கொள்ள போடி எம்.எல்.ஏ.லட்சுமணன் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications