தபேலா வாசித்து அசத்திய முஷாரப்
லண்டன்: லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தடாலடியாக மேடையில் ஏறி தபேலா வாசித்து அனைவரையும் அசத்தினார்.
முஷாரப்புக்கு தற்போது பாகிஸ்தானில் நேரம் சரியில்லை. அவருக்கு எதிராக சமீபத்தில் அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்தது. இதை எதிர்பார்த்துதானோ, என்னவோ ஏற்கனவே அவர் குடும்பத்துடன் லண்டனுக்குப் போய் விட்டார்.
இப்போதைக்கு அவர் பாகிஸ்தான் திரும்ப மாட்டார் எனத் தெரிகிறது. லண்டனில் ஹாயாக பொழுதைப் போக்கி வருகிறார் முஷாரப்.
அங்கு ஒரு இசை நிகழ்ச்சிக்கு முஷாரப்பை அழைத்திருந்தனர். அவரும் போயிருந்தார். இசை நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தபேலா வாசித்தவர் சரியாக வாசிக்கவில்லை. இதனால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அப்போது தடாலடியாக மேடையில் ஏறினார் முஷாரப். தபேலா கலைஞரிடம் சென்று கொஞ்சம் தள்ளி உட்காருங்கள் என்று கூறி அவரிடமிருந்த தபேலாவை வாங்கி வாசிக்கத் தொடங்கினார்.
தொழில்முறை வித்வான் போல முஷாரப் தபேலா வாசித்ததைப் பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அசந்து போய் விட்டனராம்.
வெளியில் அவரை பலர் இம்சையாக பார்த்தாலும், அவருக்குள் இருந்த இசையைப் பார்த்து வந்த ஆச்சரியம் அது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications