போலி மகளிர் சுய உதவி குழுக்கள்!
மதுரை: தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி மகளிர் சுய உதவி குழுக்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்கள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுய தொழில் மேற்கொள்ள வங்கிகள் மூலம் மானிய கடன்கள், அரசின் உதவிகள், சிறப்பு பயிற்சிகள் என பல சலுகைகளை அளித்து தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகின்றது.
இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்களில் ஒரே மகளிர் சுய உதவி குழுக்கள் பல்வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முயற்சிகள் நடைபெறுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ந்து போலி மகளிர் குழு குறித்து கண்காணித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications