டிக்கெட் முறைகேடு-3 திருப்பதி கோவில் ஊழியர்கள் கைது
ஹைதராபாத்: திருப்பதி கோவிலில் விஐபி டிக்கெட்டுகள் வழங்குவதில் முறைகேடு செய்த ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடசேபெருமானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து விஐபிக்களுக்கு ரூ. 500க்கு விசேஷ விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக இதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடுவுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் இருந்து சிபாரிசு கடிதம் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் சிலர் பணம் பெற்று கொண்டு விஐபி தரிசன டிக்கெட்டுகளை வினியோகித்து வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் டிக்கெட் வழங்கும் பணிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது டிக்கெட் வழங்கும் ஊழியர்கள் ஆனந்த், பிரபாகர் ராஜ், பிரசாத் ஆகியோர் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications