கொல்லத்தில் 27ல் மாவட்ட திட்ட குழு மாநாடு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மாவட்ட திட்ட குழுக்களின் மாநாடு வரும் 27ம் தேதி கேரளா மாநிலம் கொல்லத்தில் நடக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில் வறுமையை போக்கவும், பஞ்சாயத்துகளுக்கு வலுசேர்க்கவும் வளர்ச்சி பணிகளை செயல்படுத்தவும் மத்திய அரசு நிதி ஓதுக்கியது.

தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திண்டுககல, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.120 கோடி நிதி ஓதுக்கப்பட்டது.

இந்த பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் நெல்லை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டுமென்று டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேசிய மாநாட்டில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கிரகாம் பெல் கோரிக்கை விடு்த்தார்.

இந்நிலையில் மாவட்ட திட்டகுழுக்கள் தொடர்பான மாநாடு கேரள மாநிலம் கொல்லத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி மூன்றுநாட்கள் நடக்கிறது. இதில் மாவட்ட திட்ட குழுக்கள் செயல்படும் விதம், அதிகாரம், நிதி ஓதுக்கிடு, வறுமை ஓழிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்திய சமூக அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து ஐந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் நெல்லை கிரகாம் பெல், திருச்சி சங்கீதா, கிருஷ்ணகிரி ராஜேந்திரன், விருதுநகர் கடற்கரை, திண்டுக்கல் கவிதா பார்த்திபன் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+