அமீரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
அமீரகத் தலைநகர் அபுதாபி இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட இந்திய மக்கள், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையினை இந்தியத் தூதர் வாசித்தார்.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அலுவலகம் சுதந்திர தினத்தை துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடியது. இந்திய தேசியக் கொடியினை கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் சுதந்திர உரையினை வாசித்தார்.
இதில் இந்திய மக்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிக் குழந்தைகள் தேச பக்திப் பாடல்களைப் பாடினர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அபுதாபி இந்திய சோஷியல் அண்ட் கல்சுரல் செண்டரில் அதன் தலைவர் சுதிர் குமார் செட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட இந்திய அமைப்புகளான இந்தியன் சோஷியல் சென்டர், இந்தியன் இஸ்லாமிக் சென்டர், இந்தியப் பெண்கள் அமைப்பு, கேரளா சோஷியல் சென்டர், அபுதாபி மலையாளி சமாஜம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அலுவலகம், இந்தியா கிளப்புடன் இணைந்து சனிக்கிழமை மாலை கஜல் நிகழ்ச்சியினை நடத்தியது.
ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன், கல்பா உள்ளிட்ட பல்வேறு இந்திய சங்கங்களிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
தகவல்: முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ )
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்













Click it and Unblock the Notifications