கள்ள நோட்டுக்கு குவார்ட்டர் கேட்டவருக்கு சிறை
தென்காசி: தென்காசி அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 100 கள்ள நோட்டைக் கொடுத்து அதற்கு 'குவார்ட்டர்' கேட்டு மிரட்டியவருக்கு தென்காசி நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்காசி அருகே சேர்ந்தமரம் பழைய போலீஸ் ஸ்டேஷன் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 17.12.2007 அன்று இரவு, சேர்ந்தமரம் டாஸ்மாக் கடைக்கு சென்று ரூ. 100 நோட்டை கொடுத்து குவாட்டார் கேட்டுள்ளார்.
அவர் கொடுத்த ரூ. 100 நோட்டை பார்த்த கடை சேல்ஸ்மேன் சக்திவேல் அது கள்ளநோட்டு என்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் சரக்கு தர முடியாது என கூறிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியை காட்டி சேல்ஸ்மேனை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆறுமுகத்தை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அந்த கள்ளநோட்டையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த தென்காசி கூடுதல் உதவி செசன்ஸ் நீதிபதி பிருந்தா, அவருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதமும், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications