பதிப்பாளர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவு
மதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இந்த துறை சார்ந்த பணியாளர்களின் நலன் காத்திட தனி நல வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நல வாரியம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்விச் செயலாளர், நிதித் துறைச் செயலர், நூலகத் துறை இயக்குனர், இணை பொது நூலக இயக்குனர் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும், இதர எட்டு பேர், அலுவல் சாராத உறுப்பினர்களாகவும் செயல்படுவர்.
புத்தக பதிப்பாளர், விற்பனையாளர், இதன் துணைத் தொழிலான நூல் கட்டுமானம், டிடிபி ஆபரேட்டர்கள், லேமினேஷன் செய்பவர்கள், நோட்டு, புத்தகங்களை பேக் செய்யும் தொழில் செய்பவர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்.
அச்சக தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தனி நல வாரியம் இருப்பதால், அவர்கள் இந்த நல வாரியத்தில் இடம் பெற மாட்டார்கள்.
வாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications