சேலம்-திருப்பதி தினசரி ரயில் விட கோரிக்கை
சேலம்: தமிழகத்தின் மேற்கு, மற்றும் வடக்கு மாவட்ட மக்கள் நலன் கருதி சேலத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் விடவேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அன்னமய்யா ஆசிரம டிரஸ்ட் துணைத் தலைவர் எஸ்.எம்.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் இருந்து சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்ட பொது மக்கள் பல்லாயிரம் பேர் தங்களது குடும்பத்தினருடன் தினசரி திருப்திக்கு சென்று அருள்மிகு வெங்கடாஜலபதி ஸ்வாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு செல்லும் மக்கள் சாலை வழியாக செல்வதை காட்டிலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். காரணம் வயதானவர்கள் , குழந்தைகள் ஆகியோருக்கு ரயில் பயணமே சிறந்தது.
தற்போது திருப்தி செல்ல சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. அங்கிருந்து வண்டி மாறி காட்பாடி சென்றால் மட்டுமே திருப்திக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இந்த ரயிலை ஜோலார்பேட்டையில் நிறுத்தம் செய்வதற்கு பதில் காட்பாடி வரை நீடிப்பு செய்யலாம்.
மேலும், சேலத்தில் இருந்து தினசரி காலை மாலை என இரு வேளைகளில் திருப்பதிக்கு பாசஞ்சர் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
இது குறித்து ரயில்வேத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கோரிக்கைய தமிழக அரசும் பரிந்துரை செய்ய வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications