மதுரையில் பன்றிக் காய்ச்சல் கால் சென்டர் - அழகிரி தொடங்கி வைத்தார்

நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தொடர்பான முதலாவது கால் சென்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனை இந்த கால் சென்டரை தொடங்கியுள்ளது.
பன்றிக் காய்ச்சல் தொடர்பான பொதுமக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த கால் சென்டர் விளக்கம் அளிக்கும்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் தொடர்பாக இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட வருங்காலத்தில் ஒரு முழுமையான சுகாதார கால் சென்டராக இது உருவெடுக்கும்.
அனைத்து நோய்களுக்கும் இங்கு விளக்கம் தரும் வகையில் இது உயர்த்தப்படும். அரசுடன் இணைந்து நாங்கள் செயல்பட விரும்புகிறோம்.
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
தற்போது இந்த பிரச்சினையை அரசு மட்டுமே கையாண்டு வருகிறது. இதற்குத் தேவையான மருந்துகள் அரசிடம் மட்டுமே உள்ளன. ஏற்கனவே சென்னை, ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். மேலும், அரசுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் காத்திருக்கிறோம் என்றார் ரெட்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications