பெண்கள் கல்வி பயின்றால் தலைமுறைக்கும் மேன்மை அடையலாம் - கனி்மொழி
தென்காசி: பெண் கல்வி தலைமுறையை வளர்க்கும். அதன்மூலம் மேன்மை கிடைக்கும் என ராஜ்யசபா திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரை ரகுமானியா முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி ரூ.10 லட்சம செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட 2007-08-09ம் ஆண்டு கனிமொழி தனது எம்.பி. நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டார்.
அந்த வகுப்பறை கட்டிடம் மற்றும் ரூ.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம், ரூ.5 லட்சம் செலவில் உயர் கோபுரமின் விளக்கு, ஆகிவற்றின் திறப்பு விழா மற்றும் தொடக்கவிழா வடகரையில் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசுகையில்,
நான் எம்பி பதவி ஏற்றவுடன் முதன்முதலாக நிதி ஓதுக்கியது இந்த பள்ளிக்குதான். கிராமப்புறங்களில் செயல்படும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதால் அதிகளவில் பெண்கள் கல்வி பயில வாய்ப்பு உருவாகும். எனக்கு கல்விக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததாக பெருமைபடுகிறேன்.
இந்தியாவில் பெண்கள் கல்வி அதிகம் இல்லாத நிலை இருப்பதாக ஜனாதிபதி கூறினார். பெண்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அவர்களை கல்வி பயில வைக்க வேண்டும். அப்போதுதான் ஒரு குடும்பத்தின் தலைமுறையை வளர்க்கும் சக்தி கல்விக்கு உண்டு. ஆண்கள் கல்வி பொருளாதார தேவைகளை மட்டுமே நிறைவேற்றும். பெண்கல்வி குழந்தைகள் எதிர்கால கல்வி திட்டம் வளர்ச்சியை கொடுக்கும். எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்கும்.
மத்திய-மாநில அரசுகள் இணைந்து கட்டாய கல்வி (ஆர்.சி.இ) திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 6-14 வயது குழந்தைகள் கட்டாயம் கல்வி பயில வேண்டும்.
தமிழகத்தில் கலைஞர் கொண்டு வரும் நல்ல திட்டங்களை குறை சொல்லும் தலைவர்களையும், மதிப்பெண் போட்ட தலைவர்கலையும், மக்கள் அவர்களுக்கே மதிப்பெண் அளித்து புறக்கணித்து விட்டனர். நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நாம் இதை கண்கூட கண்டோம். பலர் தேர்தலில் வெற்றி பெற்றும் சட்டமன்றம் கூட செல்லாமல் உள்ளனர் என்றார்.
பின்னர் சாலைகளிலும், வழிநெடுகிலும் திரண்டு நின்ற ஏராளமான பெண்கள், குழந்தைகளிடம் எவ்வித பந்தாவும் இல்லாமல் கைக்குலுக்கி மனுக்கள் பெற்றார் கனிமொழி.
திமுக புள்ளிகள் வரவில்லை...
கனிமொழியின் நெல்லை மாவட்ட விசிட்டில் பல திமுக புள்ளிகள் மட்டுமின்றி அமைச்சர் பூங்கோதையும் ஆப்செண்ட் ஆனார். அது ஏன் என்று தெரியவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications