இரட்டை குழந்தை முறையே சரி-எதியூரப்பா!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவும் நோக்கத்தில் இரட்டை குழந்தை முறை அறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா பல ஆண்டுகளாக ஒற்றை குழந்தை திட்டத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான். இரண்டு குழந்தைகளை கொண்ட குடும்பம் அரசின் எந்த உதவியை நாட முடியாது.
இந்நிலையில் சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிவந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளால் வியந்து போயுள்ளார்.
சீனா தற்போது பயன்படுத்தி வரும் ஒற்றை குழந்தை முறையை கர்நாடகாவில் பின்பற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இரட்டை குழந்தை முறையையாவது பின்பற்ற ஆர்வத்துடன் இருக்கிறார்.
இது குறித்து நேற்று அவர் சட்டசபையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேசினார். அப்போது,
இரட்டை குழந்தை முறை மாநிலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பெரிதும் வழிவகுக்கும். இது தொடர்பாக சட்டசபையில் விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு பட்ஜெட் முன்னால் கூட அமுல்படுத்தப்படலாம். சீனாவின் இந்த திட்டம் வளர்ச்சிக்கான தந்திரம். இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நல்ல பலன் பெறுவர்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் இருக்கும் கிராம மக்கள் நல்ல ஆரோக்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். எனது சீன பயணத்தை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் எனக்கு ஞானோதயம் கிடைத்ததா என கேட்டால். ஆமாம் என்று தான் செல்வேன் என்றார்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தினருக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்காது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications