தலித் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் மாடல் கிராமம்-மத்திய அரசு
டெஹ்ராடூன்: இந்தியாவில் தலித் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் நோக்கத்தில் தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் மாடல் கிராமங்களை அமைக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆலோசகராக இருக்கும் டாக்டர் வினிதா ஷர்மா தலைமையில் செயல்பட இருக்கிறது.
இத் திட்டம் வட இந்தியாவில் ஜம்மு & காஷ்மிர், ஹிமாச்சல பிரதேசம், உத்தர்கண்ட், மேற்கு இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் தென் இந்தியாவில் தமிழ் நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இத் திட்டத்தில் டெஹ்ராடூனில் இருந்து இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற என்ஜிஓ அமைப்பு இணைந்து செயல்படவுள்ளது.
இது குறித்து ஹெஸ்கோ தலைவர் அனில் ஜோஷி கூறுகையில்,
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சிறு குடிசை தொழிற்சாலைகள் ஆகியவற்றை கொண்ட மாடல் கிராமங்களை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகரித்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
நாட்டில் சாதி பிரச்சனை இன்னும் இருக்கத்தான செய்கிறது. இதனால் தலித் மக்கள் ஊரைவிட்டு தனித்தும் அல்லது ஊர் எல்லையிலும் வசித்து வருகின்றனர்.
இதற்காக மிகவும் பாதிக்கப்பட்ட, அடிப்படை வசதிகள் முற்றிலும் கிடைக்க பெறாத தலித் மக்கள் இருக்கும் கிரமாங்களை அடையாளம் கண்டு வருகிறோம்.
தலித் மக்களின் திறமைகளை அதிகரித்து அவர்களை பொருளாதார ரீதியாக சுதந்திரம பெற செய்ய முயற்சிக்கிறோம். அவர்களுக்கு தச்சு, இரும்பு அடித்தல், வீடு கட்டுதல் போன்ற தொழில்களை ஸ்ரீதன் திட்டம் மூலம் செய்து வருகிறோம்.
ஸ்ரீதன் திட்டம் மூலம் பயன்பெறுபவர்கள் தங்களுக்கு கிடைத்த உதவிகளை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications