காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு

சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும்.
அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம்.
தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன.
பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில் காது, மூக்கு மற்றும் தொப்புள் குத்திக் கொள்வதற்கான வசதிகள் இப்போது பெருகி விட்டன.
இதுகுறித்து காது, மூக்கு, தொப்புள் குத்தும் பொட்டிக் நடத்தும் சி.சுரேஷ் என்பவர் கூறுகையில், எனது பார்லருக்கு ஏராளமான பெண்கள் வந்து காது, மூத்து குத்திக் கொள்வதோடு, தொப்புள் குத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்பு போல இப்போது வலிக்க வலிக்க யாரும், காது, மூக்கு குத்திக் கொள்வதில்லை. இப்போது அது எளிதாகி விட்டது. சிறிய துப்பாக்கி போன்ற சாதனத்தை வைத்துதான் நாங்கள் உடலில் துளையிடுகிறோம். அதில் வலி தெரியாது, மேலும், சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதால், எந்தவித தொற்றும் ஏற்படாது.
எனது பார்லருக்கு தினசரி 40 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது பார்லரிலேயே காது, மூக்கு மற்றும் தொப்புளில் மாட்டுவதற்கான அழகழகான வளையங்கள் விதம் விதமான டிசைனில் கிடைக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரப் பெண்களிடையே மூக்கு குத்துவது பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது மூக்குடன் நி்ல்லாமல் தொப்புள் குத்திக் கொள்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்.
தொப்புள் குத்திக் கொள்வதில் ஆர்வம் இல்லாத சிலர், தொப்புளைச் சுற்றிலும் பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications