Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியாத்தில் இறந்தவரின் உடலை நெல்லைக்குக் கொண்டு வர உதவி தேவை

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத்தில் சலூன் கடையில் வேலை பார்த்து மரணமடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்கிற பலயமுத்து மணி என்பவரின் உடலை நெல்லைக்குக் கொண்டு வர ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கு தாராளமாக உதவி செய்து மணியின் உடலை தாயகம் அனுப்ப உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து ரியாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் இரா.சுவாமிநாதன் விடுத்துள்ள செய்தியில்,

கடந்த 18-08-2009 செவ்வாயன்று ஹாராவில் உள்ள தமிழ்நாடு சலூனில் வேலை செய்த மணி என்கின்ற பலயமுத்து மணி மாரடைப்பால் மரணமடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கூடிய ஏழ்மையான குடும்பம். அவரது உடலை சொந்த மண்ணுக்கு அனுப்ப ரியாத் தமிழ்ச் சங்கம் தனது பங்களிப்பை செய்து கொண்டு இருக்கிறது என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொண்டுள்ளம் கொண்ட தாங்கள் அனைவரும் மணி அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிட தங்களால் இயன்ற உதவிக்கரம் கொடுத்து காத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உதவ நினைப்போர், வெற்றிவேல் - 0503158935 அல்லது சுவாமிநாதன் 0505140379 ஆகியோருடன் தொடர்பு கொண்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+