செங்கோட்டையில் குஜராத் மக்கள் தசரா கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாண்டியா ஆட்டம் ஆடி தசராவைக் கொண்டாடினர்.

இப்பகுதியில், குஜராத்திகள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தசரா திருவிழாவினை இம்மக்கள் சார்பில் 9ம் நாள் திருவிழா தாண்டியா ஆட்டம், பாட்டத்தோடு கர்ப்பா தீபா விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மிகவும் விசேஷமானது மண்சட்டி விளக்கு (கர்ப்பா தீபம்) ஆகும். மனிதன் வாழும்போது அவன் மண்சட்டிக்கு சமமானவன். அவனுள் ஆன்மா என்னும் ஓளி பிரகசிக்கும். அதுதான் கர்ப்பா தீபத்தின் சூட்சமம். தசரா திருவிழாவின் 10ம் நாளான இன்று இந்த கர்ப்பா தீபத்தினை வீட்டில் வைத்து விட்டு மண் சட்டியை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஆன்மா எப்போதும் ஓளி கொடுக்கும். ஆனால் உடல் நம்மை விட்டு போய்விடு்ம் என்பதால் அதனை உணர்த்தும் விதம் தசரா 10ம் நாள் விழா அமைந்துள்ளது. இத்தினத்தில் கோலாட்டாம் ஆடி, பாடி மகிழ்வது வழக்கம். ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தவர்கள் மட்டுமே இதுபோன்ற தசரா திருவிழாவை உலகெங்கும் கொண்டாடுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தசரா திருவிழா இந்துக்கள் பண்டிகை என்றாலும் குஜராத் கட்ச் மாவட்டத்திலுள்ள 163 கிராமங்களில் வசிக்கும் லங்கா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள்தான் மேள, தாளங்கோடு இலவசமாக 10 நாள் தங்கி இசைப்பதுண்டு என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

இப்பகுதியில் சுமார் 37 ஆண்டு காலமாக இம்மக்கள் தசரா திருவிழா கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+