காமராஜர் பெயர் சூட்ட கோரி உண்ணாவிரதம்-80 வயது தியாகி கைது!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த 80 வயது தியாகியை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13.10.09 அன்று திறந்து வைக்கவிருக்கிறார். இந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ராதாபுரத்தை அடுத்துள்ள குமிளம்பாடு கிராமத்தில் தியாகி சுடலைமுத்து(80) என்பவர் கடந்த 2ம் தேதி முதல் இந்த காரணத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நேற்று 4வது நாளாக அவர் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதனால் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீஸார், கைது செய்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாக சுடலைமுத்து அறிவித்துள்ளார். இதனால் ராதாபுரம் பேருந்து நிலைய விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications