திருப்பதி கோவில் சுவர்களில் தங்கமுலாம்-விஎச்பி எதிர்ப்பு
சென்னை: திருப்பித வெங்கடேஸ்வர பெருமான் கோவில் சுவர்களில் தங்கமுலாம் பூசுவதால் அவற்றில் இருக்கும் கல்வெட்டுகள் மற்றும் விலைமதிப்பற்ற வரலாற்று பொக்கிஷங்கள் அழிந்துவிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிரமோற்சவத்தின் போது ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ரூ. 150 கோடி மதிப்பில் திருப்பதி கோவில் சுவர் முழுவதும் தங்கமுலாம் பூசும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் வேதாந்தம், திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் ஆதிகேசவலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர்,
இந்து கோயில்கள் நம்நாட்டு வரலாற்று அங்கமாகத் திகழ்பவை. திருப்பதி கோவில் சுவர்களில் பல அரிய செய்திகள் அடங்கிய கல்வெட்டுக்கள் உள்ளன. இவை விலைமதிப்பற்ற நமது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை தாங்கி நிற்கிறது.
கோவில் சுவர் முழுவதும் தங்கமுலாம் பூச வேண்டும் என இந்து சயமத்தை சேர்ந்த எந்த அமைப்பும் கோரி்க்கை வைக்கவில்லை. மாறாக சில தனி நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் இது குறித்து ஆசைப்படுகின்றனர்.
தங்கபூச்சு வேலை மூலம் வரலாற்றினை அழிக்க முற்படுகின்றனர். இது கோவிலின் மத விவகாரத்தில் தலையிடுவதாகும். இந்த பணிகளை தொடரக்கூடாது என விஸ்வ இந்து பரிஷத் கேட்டு கொள்கிறது. விளைவித்த சேதங்களை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்றார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications