பாணதீர்த்த அருவிக்கு செல்வோருக்கு உயிர் காப்பு கவசம் கட்டாயம்
பாபநாசம்: தேக்கடி படகு விபத்தைத் தொடர்ந்து, பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உயிர்காப்பு கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேக்கடியில் இரு வாரங்களுக்கு முன்பு படகு கவிழ்ந்து பல உயிர்கள் பலியாகின. இதை தொடர்ந்து பாபநாசம் அணையிலிருந்து படகில் பாணதீர்த்தம் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் உயிர் காப்பு கவசம் அணிந்து செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் பாபநாசத்தில் அலை மோதியது.
மின்துறை உதவி செயற்பொறியாளர் சுடலையாண்டி படகில் செல்லும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தினார்.
பாணதீர்த்தம் அருவிக்கு செல்ல 24 படகுகள் உள்ளன. ஆனால் உயிர்பாதுகாப்பு கவசம் குறைந்த அளவே உள்ளதால் பாதிக்கும் மேற்பட்ட படகுகள் போககுவரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பாணதீர்த்த அருவிக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications