தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் 80வது பிறந்த நாள் விழா
சென்னை: ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி என். மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
தனது ஆன்மீக குருக்களில் ஒருவரான ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஆசிபெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.
ஆன்மீகத்துடன் பல்வேறு சமுதாயப் பணிகளை நிறைவேற்றி வருபவர், சுவாமி சின்மயானந்தரின் சீடர் ஸ்ரீதயானந்த சுவாமிகள்.
இவரது 80வது பிறந்த நாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
தர்ம ரக்ஷனா சமிதி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம் தலைமை தாங்கிப் பேசினார். சுவாமிகளின் சேவை மற்றும் பகவத் கீதை சொற்பொழிவுகள் குறித்து அவர் புகழந்தார்.
விழாவில் நடிகர் ரஜினி, அவரது மனைவி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தொழிலதிபர்கள் வேணு சீனிவாசன், கருமுத்து டி.கண்ணன், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசிபெற்று, வாழ்த்திப் பேசினர்.
விழா நிறைவில் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் பேசும்போது, எல்லா கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நம் இந்து கலாசாரத்தை பாதுகாத்தே ஆக வேண்டும். நம்மில் பல்வேறு அமைப்புகள், மத தலைவர்கள் உள்ளனர். அவரவர் தங்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டு தங்களுக்குள் புரிதலை, தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, தர்ம ரக்ஷனா சமிதியின் துணைத் தலைவரும் பரதநாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications