பல்லவர் கால தமிழ், சமஸ்கிருத கல்வெட்டு கண்டுபிடிப்பு
வேலூர்: வேலூர் அருகே பல்லவர் காலத்து தமிழ் மற்றும் சமஸ்கிருத கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் கோட்டை மியூசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கமலநாதன் கூறுகையில், கல்வெட்டின் நீளம் நாலரை அடி, அகலம் 2.5 அடியாகும். முன்பக்கம் 8 வரி எழுத்துகளும், பின்பக்கம் ஏழு வரிகளும் காணப்படுகின்றன. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இவை உள்ளன.
திப்பசமுத்திரம் என்ற இடத்தில் 2 நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் நடந்த பணியின்போது பள்ளம் தோண்டியபோது இந்த கல்வெட்டு கிடைத்தது.
பல்லவர் காலத்து கல்வெட்டு இது என்று தெரிகிறது. இதுவரை கிடைத்த பல்லவர் கால கல்வெட்டுகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கும் எனவும் கருதுகிறோம் என்றார் அவர்.
4வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள், கிட்டத்தட்ட 500 ஆண்டுகள், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications