நவம்பர் 10ம் தேதி ஏர்வாடி சந்தன கூடு விழா !
Subscribe to Oneindia Tamil
கீழக்கரை: ஏர்வாடி தர்காவில் பாதுஷா நாயகம் நினைவாக சந்தனக்கூடு விழா நேற்று மாலையில் கோலாகலமாக துவங்கியது. நவம்பர் 10ம் தேதி சந்தனக் கூடு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற விழாக்களில் இஸ்லாமியர்களின் ஏர்வாடி சந்தன கூடு விழாவும் ஒன்று.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பெருவாரியான முஸ்லீம் மக்கள் கலந்து கொள்வார்கள்.
இதனையடுத்து, ஏர்வாடி தர்கா நிர்வாகத்தினர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மவ்லீது ஓதினர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 29 ல் கொடியேற்றமும், நவம்பர் 10ம் தேதி நள்ளிரவில் சந்தனக்கூடு விழாவும் நடைபெறுகின்றது.












Click it and Unblock the Notifications