திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் 27ம் தேதி ராகு பெயர்ச்சி
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவிலில் 27ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதற்கான லட்சார்ச்சனை விழா தொடங்கியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் மட்டுமே ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என தனது இரு தேவியருடன் திருமணக்கோலத்தில் நிருதி மூலையில் தனி சந்நிதி கொண்டு மங்கள ராகுவாக எழுந்தருளி, உலக மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
இக்கோவிலில் வருகிற 27ம் தேதி காலை 9.04 மணிக்கு ராகு பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
இதை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், தயிர் பள்ளயம், அன்னதானம், லட்சார்ச்சனை, வீதியுலா ஆகியவை நடைபெற உள்ளன.
ஸ்ரீ ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான லட்சார்ச்சனை விழா புதன்கிழமை தொடங்கியது. அறங்காவலர் குழுத் தலைவர் செ. ராமலிங்கம் தொடக்கி வைத்தார்.
முதல் கட்ட லட்சார்ச்சனை இன்றுடன் முடிகிறது. கோயில் சிவாச்சாரியார் நாகராஜ குருக்கள் தலைமையில், உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை பூஜையில் ஈடுபட்டனர்.
இரண்டாம் கட்டமாக லட்சார்ச்சனை வரும் அக். 29 -ம் தேதி தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications