கோவை மாநாடு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை- சிவத்தம்பி
Subscribe to Oneindia Tamil

கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன். ஈழத்து நிலை அவலமாக இருக்கும்போது இந்த மாநாட்டில் பங்கேற்பது சரியாக இருக்காது, பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் சிவத்தம்பி தொடர்பாக வெளியான செய்திகளை முதல்வர் கருணாநிதி மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், சிவத்தம்பி மாநாட்டுக்கு சில நாட்கலுக்கு முன்பாகவே வருவதாக கூறியுள்ளார். மேலும், அவரே சில தலைப்புகளையும் பரிந்துரைத்துள்ளார். அவரது கோரிக்கையின் பேரில்தான் மாநாடும் ஜூன் மாத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து பிபிசிக்கு சிவத்தம்பி அளித்துள்ள ஒரு பேட்டியில், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications