அந்தமானில் திருக்குறள் விழா- வள்ளுவர் சிலை திறப்பு

திருவள்ளுவர் சிலையை மத்திய அமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார்.
சனிக்கிழமை 6ம் தேதி இந்த மாநாடு தொடங்கியது.
தமிழகத்திலிருந்து பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பனை வாரியத்தலைவர் குமரி அனந்தன்,தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஔவை.நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
வி.ஜி.செல்வராஜ், மருதவாணன்,போசராசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ப்புத்தகங்கள் 8 ஆம் வகுப்பு பாடநூல்கள் வரை தமிழகத்திலிருந்து வருகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று தமிழக அரசு புத்தகங்களை அனுப்புகின்றது.தமிழர்கள் பலருக்கு வீட்டுமனை இன்றும் இல்லை.
தென்னஞ்சோலையாக,வயல்களாக,கரும்புத்தோட்டமாக மாற்றியுள்ளனர் விமானம் நிலையத்திற்கு நிலம் எடுக்க தமிழர்கள் நிலம் எடுக்கப்பட உள்ளன.
அந்தமானில் தமிழ் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உள்ளனர். அவர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.
தமிழில் படிக்க முன்பு வாய்ப்பு இல்லை. தமிழ்க் கல்வி வேண்டி தீக்குளிப்போம் என்று போராடினர். பிறகு வெற்றி கிடைத்தது. அந்தமானுக்குத் தமிழர் ஆளுநராக ரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழர் பண்பாடு வளரத் தமிழர்கள் ஆளுநராக வர வேண்டும் என்று உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.
தமிழராசிரியர் மனோகரன் பேசுகையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல இன மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றார்.
ஔவை. நடராசன் பேசுகையில், தமிழ் ஒலிக்க முடியாத கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்லூரி. அதில் தமிழ் வளர்த்தவர் உலக நாயகி. தாய் தன் மகனைப் பார்க்கும்பொழுதெல்லாம் இளைத்துள்ளாய் என்பாள்.
அதுபோல் பலரும் தமிழ் வளரவில்லை என்கின்றனர். ஆனால் கணிப்பொறி உலகில் தமிழ் நன்கு வளர்ந்துள்ளது.
அந்தமான்தமிழ்ச்சங்கம் பல்வேறு தமிழ்ப்பணிகளைச்செய்து வருகிறது. தமிழக அரசு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை உருவாக்கித்தில் உதவியது. வெளிநாட்டுக்கு அனுப்பும் பாட நூல்களில் சிக்கல் என்ன என்றால் தமிழக அமைப்பு அதில் சொல்லப்பட்டிருக்கும். அந்தமான் குழந்தைகள் இது பற்றி அறியமாட்டார்கள். தமிழ்ப்பாட நூல்களைப் பயன்கொள்ள சிக்கல் உள்ளது.
முரண்பாடு இல்லாமல் நம் கருத்துகளை முன்வைத்து வெல்வது இன்று தேவை. சொற்களுக்குப் பொருள் காண்பதில் பலர் தவறு செய்கின்றனர்.பெரியார் கருப்புச் சட்டைப் போராட்டம் என்றார். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் தவறாகப் புரிந்து எழுதினார்
மனைவி உணவு உண்ண அழைக்க செல்லவில்லை என்றால் அதனையே பெரும்போராட்டம் என்பர்.
தமிழில் புறம், அகம், திருக்குறள், சங்க இலக்கியப்புகழ் உள்ளது எனப்பேசி பயன் இல்லை 40 உறுப்பினர்கள் இருந்த்தால் ஆனது. தமிழ் மக்கள் உயர்ந்தால் தமிழ் உயரும்.
தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நலத்தால் ஓங்க வேண்டும். வளத்தால் ஓங்க வேண்டும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் வளர்ந்துள்ளது.
கடற்கரை என்றால் நண்டும் கிடக்கும். நாற்றம் இருக்கும். ஆனால் வி.ஜி.பி.மிகப்பெரிய தூய்மை இடத்தைப் பராமரிக்கின்றனர். இது வி.ஜி,பியின் பெருமை இல்லை. தமிழன் பெருமை. தமிழ் என்றால் இனிமையான வாழ்க்கை என்று பொருள்.
குறிஞ்சிப்பாட்டு இப்பாடல் என்னுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று என்று கூறுவதிலிருந்து தமிழின் சிறப்பை உணரலாம். இனிமை என்றால் தமிழ் என்று பொருள். போர் என்றால் தமிழ். குடும்பம் என்றால் தமிழ். காதல் என்றால் தமிழ். இன்னிசையால் தமிழ் பரப்பியவன் தமிழன். இனம் வளர்ந்தால் மொழி வளரும் பிள்ளைகள் வளர தாய்ப்பால்தான் தேவை.
ஆவின் பால் காய்ச்சிய பால்தான் நல்லது.
தாய்ப்பால் குடிக்க மறந்த தமிழனை முன்னேற்றத் தனித் தமிழ் இயக்கம் வளர்ந்தது.
இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது. உலகில் தமிழர்கள் இதனை நன்கு உணர வேண்டும்.
திருவள்ளுவர் காலத்தில் அரசன், சமய வாணர்கள் சொன்னால் யாரும் மறுக்கக்கூடாது என்பது அக்கால இயல்பு. வள்ளுவர் எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் என்றார். திருவள்ளுவர் கூறிய கருத்துகளைச் சாக்ரடிசும் சொல்லவில்லை. பிறப்பு ஒக்கும் என்றவர் திருவள்ளுவர். உழைப்பவனுக்குக் கல்வி வராது என்ற காலத்தில் சொன்ன கருத்து இது. வேதங்கள் அதிர்ந்தன. கல்வியைக் கண்ணென்ப வாழும் உயிருக்கு என்றார் வள்ளுவர்
காலத்தால் பழைமையும் கருத்தால் புதுமையும் உடையது திருக்குறள் என்றார் ஔவை.நடராசன்.
தலைமையுரையாற்றிய வி.ஜி.சந்தோஷம் பேசுகையில்,
6 அடி உயர சிலை அந்தமான் தமிழர் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 8 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.வ ள்ளுவரின் புகழ் பரப்ப வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.அதனால் இப்பணி தொடர்கிறது என்றார்.
நேற்று 2ம் நாள் நிகழ்வு காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. முதல் நிகழ்வாகத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை. நடராசன் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.
திருவள்ளுவர் வலியுற்றுத்துவது சமூக ஒழுக்கமா?தனிமனித ஒழுக்கமா?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பேராசிரியர்கள் உலகநாயகி அவர்களின் தலைமையில் முனைவர் அரங்க.பாரி, முனைவர் பிலவேந்திரன், சுதா ஓர் அணியாகவும் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் தலைமையில் பேராசிரியர்கள் இராசா, திலகவதி ஆகியோர் ஓர் அணியாகவும் இருந்து அவையினர் உளங்கொள்ள திருக்குறள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
பகலுணவுக்குப் பிறகு மாலையில் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
மத்திய அமைச்சர் நெப்போலியன், அந்தமான் எம்.பி., அந்தமான் தமிழர்கள், தமிழகத்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் அந்தமான் தமிழர் சங்க அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாநாட்டு மலரினை, நெப்போலியன் வெளியிட அந்தமான் பாராளுமன்ற உறுப்பினர் பிட்னு பதே இராய் பெற்றுக்கொண்டார்.
அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் போசராசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் உரையாற்றினார். நெப்போலியன் நிறைவுறையாற்றினார்.
நன்றி: http://muelangovan.blogspot.com/
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications