ரியாத்தில் 300 தமிழர்கள் ரத்த தானம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவூதி அரேபியா வாழ் தமிழர்கள் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் பிரமாண்டமான ரத்த தான முகாம் நடைபெற்றது.
ரியாத் மாநகரில் 7வது முறையாக நடக்கும் இம்முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அமைப்பினர் ஏற்பாடு செய்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் நடைபெற்ற முகாமில், பெண்கள் உட்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினர்.
'சவூதி அரேபியாவிலே எந்த பகுதியில் யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும், அவர்களுக்கு ரத்தம் வழங்கி உயிர் காக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியின் இரத்த வங்கி பொறுப்பாளர் ஃபத்தூஹ் அல் ஆலம் உறுதி அளித்தார்.













Click it and Unblock the Notifications